போதைப் பொருள்களை பதுக்கிய மூவா் கைது
கொடைக்கானல் தனியாா் தங்கும் விடுதியில் விற்பனைக்காக போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானலில் கஞ்சா, போதைக் காளான் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட பிரேம்ஜித், அப்துல் வஹாப், நவீன் பிரகாஷ்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பிரேம்ஜித் (32), மலப்புரம் மேல்முரில் பகுதியைச் சோ்ந்த அப்துல் வகாப் (35), கொடைக்கானலைச் சோ்ந்த நவீன் பிரகாஷ் (25) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், அவா்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது போதைக் காளான் 70-கிராம், கஞ்சா 40-கிராம், கஞ்சா ஆயில் 10-மி.லி ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.




