டேக்வாண்டோ போட்டி ஏ.ஆர்.ஜி., கிளப் சாம்பியன்
சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில், ஏ.ஆர்.ஜி., கிளப் சாம்பியன்ஷிப் வென்றது.
சிதம்பரத்தில் ஏ.ஆர்.ஜி., டேக்வாண்டோ கிளப் மற்றும் ஏ.ஆர்.ஜி., அகடாமி சார்பில் மாவட்ட அளவிலான 7வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் பொதுச் செயலாளர் செல்வமணி, மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஏழுமலை போட்டியை துவக்கி வைத்தனர்.
கடலுார், விருத்தாசலம் , சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஏ.ஆர்.ஜி., டேக்வாண்டோ கிளப் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. சிறப்பு விருந்தினர் மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில், கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், இன்னர் வீல் சங்க மாவட்டத் தலைவர் ரேணுபாலா, முன்னாள் தலைவர் இந்திரலேகா, மாவட்ட உறுப்பினர் பத்மினி உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியை ஏ.ஆர்.ஜி., டேக்வாண்டோ கிளப் தலைவர் கீதா, பொருளாளர் கணேசன் ஒருங்கிணைத்தனர்.


