அமிதாப் பச்சன் காட்டம்: வலைப்பதிவைத் திரித்து, போலிச் செய்திகளாகக் கூறும் ஊடகங்களுக்கு ஆவேசப் பதில்
தனது வலைப்பதிவு பதிவுகளை ஊடகங்கள் திரித்து எழுதுவதாகவும், வணிக நோக்கத்திற்காகப் போலி விவரிப்புகளை உருவாக்குவதாகவும் நடிகர் அமிதாப் பச்சன் காட்டமாகச் சாடியுள்ளார். | Amitabh calls media interpretations of his blog posts 'beyond laughable' and slams the rush for commercial attention over accuracy.
ஒவ்வொரு ஊடகமும் `தானே முதலில் செய்தி கொடுக்க வேண்டும்’ என்ற பதற்றத்தில் பொது வெளியில் ஒரு செய்தியை மற்றவர்களை விட முந்தித் தந்து கவனத்தை ஈர்ப்பதில் குறியாக இருக்கிறது.
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை அமிதாப் பச்சன். சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பிருந்தே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றித் தினமும் நள்ளிரவில் தனது தனிப்பட்ட வலைப்பதிவில் (Blog) வாழ்க்கைத் தருணங்கள், தத்துவங்கள் மற்றும் தொழில் அனுபவங்களை எழுதிவருகிறார்.
அவரைப் பொறுத்தவரை இது அவரது ரசிகர்களுடனான (அவர்களை 'Extended Family' அல்லது 'EF' என்று அன்போடு அழைப்பார்) ஒரு நேரடி உரையாடல் பாலம்.


