போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்புக்கு நன்றி
கிருஷ்ணகிரி: தமிழக அரசு போக்கு வரத்து கழக ஓய்வூதியர்க-ளுக்கு, பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்-கப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கு இணையான உயர்வு வழங்கக்கோரி, போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற அலுவலர் நலச்சங்கம் உள்-ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில், 2023 மார்ச், 2-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பணியிலுள்ள ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் அகவிலைப்படி விகிதமே, ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிரான மேல்முறையீடுகள் அனைத்தும், தள்ளுபடி செய்யப்பட்டன. இதைய-டுத்து, ஆக., 31ல் போக்குவரத்து துறை அர-சாணை பிறப்பித்து கடந்த, 5ம் தேதி முதல் தவணை, ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 98,000 ஓய்வூதியர்கள் பயன்பெற உள்ளனர்.இந்த அரசாணையை வரவேற்ற போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்-தனர். மேலும், இதுதொடர்பான வழக்கை வெற்-றிகரமாக நடத்தி முடித்துள்ள கோவை பேர-வைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்-டனர்.

