த.வெ.க., நிர்வாகியை தாக்கிய தி.மு.க.,வினர் மீது வழக்கு
துாத்துக்குடி: த.வெ.க., நிர்வாகி பீட்டர், 48, என்பவர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர், ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார், கீழபுதுக்குடியை சேர்ந்தவர் பீட்டர். இவர், த.வெ.க., திருச்செந்துார் மேற்கு ஒன்றிய பொருளாளர்.
புதிதாக வீடு கட்டி வரும் பீட்டருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஞானராஜ், 62, என்பவருக்கும், சில நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது.



