தேசிய நெடுஞ்சாலையில் இருளால் விபத்து
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் போதிய விளக்குகள் இல்லாமல் விபத்துகள் நடக்கிறது.
இப்பேரூராட்சி வழியாக செல்லும் காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்ட பிறகு இப்பகுதியில் கூடுதல் விளக்குகள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள ஓரிரு விளக்குகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதே போல் மேலுார் ரோட்டிலும் விளக்குகள் குறைவாக உள்ளது. எனவே இப்பேரூராட்சிக்குட்பட்ட தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் உரிய இடங்களில் கூடுதல் விளக்குகளை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

