தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிக்க திட்டம்
சென்னை, எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக்குறைக்க தாம்பரம் ரெயில் நிலைய தண்ட வாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம
எழும்பூர் நிலையத்தின் நெரிசலைக்குறைக்க தாம்பரம் ரெயில் நிலைய தண்ட வாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள ரெயில் நிலையம் இரண்டாவது பெரிய முனையமாக உள்ளது. தாம்பரம் ரெயில் நிலையம் ஆண்டுக்கு 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாளுகிறது. இருப்பினும், இந்த நிலையத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள், தொலைதூர ரெயில்கள் இயக்கப்படும் நடைமேடைகளை அடைவதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 உயர்த்த நீட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, தண்டவாள மேம்பாடு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. மேலும் அவை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ரெயில் நிலையத்தில் நீண்ட தூர ரெயில்களை இயக்குவதற்காக தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10லிருந்து 15ஆக அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


