ரூ.200 கோடி எதிர்பார்ப்பு... ரூ.30 கோடியாக குறைந்த ‘டாக்ஸிக்’ ஓடிடி உரிமை?
சென்னை,‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமம் ஆரம்பத்தில் ரூ.150–ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆபர் செய்யப்படுவதாக கூ
‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமம் ஆரம்பத்தில் ரூ.150–ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆபர் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். கீது மோகந்தாஸ் இயக்கத்தில் கடந்த 26ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் ரிலீஸ் ஆனது. கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுத்ரியா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து வசூலில் சரிவு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட ரூ.300 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



