நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்..
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பாத ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட முனியசாமி என்பவரது மகளுக்கும் மதுரையைச் சேர்ந்த முருகனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மது போதையில் முருகன் அடித்துத் துன்புறுத்தியதால், முனியசாமியின் மகள் குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.


