தமிழக ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடி
கரூர்: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை, 6 மாதங்களில் தமிழகத்தின் ஏற்றுமதி, 2.98 லட்சம் கோடி ரூபாயை தாண்டி, தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக் கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, சீனா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள், மருந்து, ஜவுளி, நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேற்காசிய போர் தொடர்வதால், உலகளவில் வர்த்தக பதற்றம் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இருப்பினும், மத்திய வர்த்தக அமைச்சக தகவலின்படி, நடப்பு ஆண்டு ஜன., முதல் ஜூன் வரை ஆறு மாதங்களில், அதிக ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், 2,98,109 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து, தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இது, 13.46 சதவீதம்.






