பிரிக்ஸ் அமைப்பின் 20 ஆண்டுகள்: நினைவுகூரும் அஞ்சல் தலைகள் வெளியீடு
இந்த இரண்டு அஞ்சல் தலைகளும்,இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு 2026-ன் முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்றன.
பிரிக்ஸ் அமைப்பின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புது தில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இன்று (12 செப்டம்பர் 2026) இரண்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
“BRICS: Two Decades of Cooperation, 2006–2026” என்ற வாசகத்தைக் கொண்ட இந்த நினைவு அஞ்சல் தலை, உரையாடல், ஒத்துழைப்பிற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியைக் கொண்டாடுகிறது.

