பல காலகட்டங்கள்... வாரணாசி கதையைப் புகழ்ந்த பிருத்விராஜ்!
வாரணாசி திரைப்படத்தைப் புகழ்ந்த பிருத்விராஜ்...
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் வாரணாசி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் வாரணாசி. இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். ராஜமௌலியின் முந்தைய படமான 'ஆர்ஆர்ஆர்'-க்காக ஆஸ்கர் விருது வென்ற எம். எம். கீரவாணி 'வாரணாசி' படத்திற்கு இசையமைக்கிறார்.
ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன.



