மணிப்பூர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
இம்பால்,மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல
மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார்.



