செப்டம்பர், அக்டோபரில் நலத்திட்ட உதவி முகாம்கள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் அரசு திட்டங்களை எடுத்துரைத்து, கடன் விண்ணப்பம் பெற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடக்க உள்ளது.
இதில் மாவட்ட தொழில் மையம், தொழில் முதலீட்டுக் கழகம், காதி கிராம தொழில் வாரியம், மகளிர் திட்டம் உட்பட பல்வேறு அலுவலகங்களுடன் ‘தாட்கோ’ அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்த உள்ளது.
செப். 15 ல் செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்துார், விக்கிரமங்கலம், செப்.16 ல் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் அ.பாறைப்பட்டி, செப்.17 ல் திருமங்கலம் கரிசல்பட்டி, செப். 18 ல் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாங்குளம், செப்.22, 23 ல் கொட்டாம்பட்டி ஒன்றியம் மேலவளவு, செப்.24 ல் கிழக்கு ஒன்றியம் ஆண்டார்கொட்டாரம், கார்சேரி, செப்.25 ல் காதக்கிணறு, கொடிக்குளத்தில் முகாம் நடக்க உள்ளது.

