அடுத்தடுத்து மூன்று கார்கள் விபத்து
திண்டுக்கல்: கோயமுத்துாரை சேர்ந்தவர் சாய்தருண் 21. இவர், கும்பகோணம் செல்வதற்காக காரில் புறப்பட்டார்.
திண்டுக்கல்: கோயமுத்துாரை சேர்ந்தவர் சாய்தருண் 21.
இவர், கும்பகோணம் செல்வதற்காக காரில் புறப்பட்டார். திண்டுக்கல், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அப்போது முன்னால் சென்ற கார் திடீரென வேகத்தை குறைத்தால், மோதாமல் இருப்பதற்கு சாய்தருண் பிரேக்கை அழுத்தினார். அப்போது அவருக்கு பின்னால் திருச்சியை நோக்கி சென்ற 2 கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 3 கார்களும் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக உயிர்சேதம் இல்லை. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.



