மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்
திருப்பத்தூர் மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான கோழிகள், ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக குவிந்தன.
அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம், சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனா்.


