கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் அதிகரிப்பு
சென்னை,தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவன
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.


