முதல்வரின் லண்டன் பயணம் - இ.பி.எஸ் விமர்சனம்
அதிமுக எம்.எல்.ஏ.க்களை தூக்கி சென்றுவிட்டனர். சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள். குதிரை பேரத்திற்கு விலை போனதால் இடைத்தேர்தல். குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்துச் செல்வது போல் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தூக்கி சென்றுவிட்டனர்.
தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏ.க்கள் சுயநலத்திற்காக பதவியை ராஜினாமா செய்தனர். குதிரை பேரத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் விலை போனதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 4 மாதங்களில் எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை; எல்லாமே ரீல்ஸ் தான். எந்த வித மக்கள் பணியும் செய்யாமல் தவெகவினர் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
மக்கள் நலனிற்காக ஒரு துரும்பைக் கூட தவெக கிள்ளிப்போடவில்லை. அதிமுக மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தது. தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.




