ஆவின் விற்பனையகங்களில் கர்நாடக நெய்! அதிர்ச்சி காரணம்
ஆவின் விற்பனையகங்களில் கர்நாடக நெய் விற்கப்படுவது குறித்து அதிர்ச்சி காரணம் வெளியானது.
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிறுவனத்தில், கடந்த ஒரு சில மாதங்களாக நெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு சில ஆவின் விற்பனையகங்களில் கர்நாடக நெய் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து கர்நாடக தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ஆவின் நிறுவனங்களில், நெய் இருப்புக்கும் தேவைக்கும் இடையே இருக்கும் பற்றாக்குறையை நிறைவு செய்யும் வகையில், ஆவின் நிர்வாகம், கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற நந்தினி நெய் வகையை வாங்கி, பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின் விற்பனையகங்களில் வைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், ஆவின் கடைகளில் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்படும் நெய் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாட்டில்களில் விற்கப்படுகிறது.


