வீட்டின் ஓட்டை பிரித்து குரங்குகள் அட்டகாசம்
காரைக்குடி, செப். 10- குன்றக்குடியில் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கி பொருட்களை உடைத்து நாசம் செய்யும்
குன்றக்குடியில் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கி பொருட்களை உடைத்து நாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
காரைக்குடி புதுவயல் கோட்டையூர் கண்டனுார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றி தெரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். குன்றக்குடியில் ஓட்டு வீடுகளின் ஓட்டை பிரித்து ஆளில்லாத நேரத்தில் வீட்டுக்குள் இறங்குகிறது. வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை கீழே தள்ளி உடைப்பதால் மக்கள் அச்சமடைகின்றனர். அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

