`ஆசிரியை உமா மகேஸ்வரி மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்' - கல்வியாளர்கள் வலியுறுத்தல்!
தரமான கல்விக் கூடங்கள் உருவாக்குதல் என்ற கண்ணோட்டத்தையும் கொண்டு ஆசிரியர் உமா மகேஸ்வரி பொது வெளியில் கருத்துக்கள் பதிவிட்டதை, அரசுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டி கடந்த தி.மு.க அரசு அவருக்குக் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
திமுக ஆட்சியில் நடந்த பழிவாங்கும் நடவடிக்கையை தவெக அரசு தொடரக்கூடாது எனவும் வலியுறுத்தல்.
``கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊதிய உயர்வு வெட்டுடன் பணியாற்றி வரும் ஆசிரியை உமா மகேஸ்வரி மீது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை, தவெக அரசு கைவிட வேண்டும்" என்று மக்கள் கல்விக் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
மக்கள் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் இரா.முரளி, வீ.அரசு, சிவக்குமார், கல்வியாளர் கண குறிஞ்சி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



