நீர் நிலை ஆக்கிரமிப்பு பள்ளி கட்டம் கோர்ட் உத்தரவால் அதிரடியாக இடிப்பு சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரம், செப். 18 – சிதம்பரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை கோர்ட் உத்தரவின்
சிதம்பரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை கோர்ட் உத்தரவின் போரில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.
சிதம்பரம் நகராட்சி சார்பில் குளங்கள் மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் பூதகேணி பகுதியில் அமைந்துள்ள, பிள்ளையார் குளத்தை ஆக்கிரமித்து, முஸதப மெட்ரிக் பள்ளி நிர்வாகம் பள்ளி கட்டடம் கட்டி ஆக்கிரமித்திருந்தது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய கடந்த 2022ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டும், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இந்நிலையில், கோர்ட் உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 13ம் தேதிக்குள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது. தவறினால், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரும் 21ம் தேதி நேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.


