பேனர் செய்தி
சிக்கல் *நீர் நிலைகளில் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தும் * நடைமுறைகளை எதிர்கொள்வதில் விவசாயிகள் தவிப்பு
*நீர் நிலைகளில் மண் எடுக்க அரசு அனுமதி அளித்தும்
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க, தமிழக அரசு விவசாயிகளுக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், நடைமுறைகளை எதிர்கொள்வதில் சிக்கல்களால் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நீர் நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அரசு அறிவித்த நீர் நிலைகளில் மட்டுமே எடுக்க வேண்டும். கிராமங்களில் அதிகமாக உள்ள நீர் நிலைகள் அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை. இதனால், விவசாயிகள் இந்த திட்டத்தில் முழுமையான பயன்பெற முடியவில்லை. மேலும் விவசாயிகள் வண்டல் மண் அள்ள வருவாய் துறை மற்றும் ஊராட்சி அலுவலர்களை சந்திக்க நடையாய் நடக்க வேண்டி உள்ளது. இலவசமாக மண் அள்ள அனுமதி தருவதில், அதிகாரிகளுக்கு மனம் இல்லை.

