ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை விரிவுபடுத்த அரசு திட்டம்
ராசிபுரம்: ''ஆன்லைன் பத்திரப்பதிவு முறை மேலும் விரிவுபடுத்தப்படும்,'' என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, சென்னை மாகாண முன்னாள் முதல்வர் சுப்புராயன் மணிமண்டபம் உள்ளது.
நேற்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு, மார்பளவு சிலைக்கு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாலை அணிவித்தார்.


