மதுரை: பராமரிப்பின்றி கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா - சீரமைக்கக் கோரும் பொது மக்கள்!
மர்ம நபர்களால் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கம்பிகள் என அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தன. மதுப்பிரியர்கள் கூடும் இடமாக பூங்கா மாறியது. மது பாட்டில்கள் உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள், பூங்காவுக்கு வருவதையே தவிர்க்க ஆரம்பித்தனர்.
மதுரை மாவட்டம், தெற்குத் தொகுதி, வார்டு எண் 71, மண்டலம் 3 பகுதியில் சேர்மன் முத்துராமையர் சாலையில் மதுரை மாநகராட்சியின் ஜோசப் பூங்கா கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டு (AMRUT – Atal Mission for Rejuvenation and Urban Transformation) புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் திட்டத்தின் மூலமாக பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம். நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி, முறையான கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.



