சரியும் பவானிசாகர் அணை நீர்மட்டம்- விவசாயிகள் வேதனை
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 2.47 லட்சம் விளைநிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி கொண்டது பவானிசாகர் அணை. அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும். பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இந்நிலையில் பாசனங்களுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது .இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53.29 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1772 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தற்போது 5 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி வீதம் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 20.06 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.57 அடியாகவும், வறட்டுபள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 14.83 அடியாகவும் சரிந்துள்ளது. தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
