ஈரான், அமெரிக்காவின் அடுத்த வியட்நாமா? ஆயுதங்கள் காலி.. நெருக்கடியில் ட்ரம்ப்!
செய்தியாளர் - M. மீராஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ ரீதியாக வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தளப
ஈரான் போரில் வெற்றி பெற்றதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தாலும், தளபதிகளின் நேரடி மதிப்பீடுகள் அமெரிக்காவுக்கு கடுமையான சிக்கலை காட்டுகின்றன. பேட்ரியாட், ATACMS உள்ளிட்ட முக்கிய ஏவுகணை கையிருப்புகள் குறைந்து, ஹார்முஸ் நீரிணை பதற்றம் உயரும் நிலையில், சீனா, ரஷ்யா, வடகொரியா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் பாதிக்கப்படுமோ என்ற கவலை எழுகிறது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ராணுவ ரீதியாக வெற்றி பெற்றதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் இருந்து வரும் தகவல்கள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளபதிகளிடம் நேரடியாக போரின் நிலவரம் குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கமான பென்டகன் அறிக்கைகளை மட்டுமே நம்பாமல், களத்தில் இருக்கும் தளபதிகளின் நேரடி மதிப்பீடுகளை அறியவே அவர் இந்த ஆலோசனைகளை மேற்கொண்டதாக தெரிகிறது.
அதில் வெளியான தகவல்கள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்துள்ளது. முக்கியமாக, பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ராணுவப் பிராந்தியத்தில் 100-க்கும் குறைவான பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
