புரோசோன் மாலில் ‘பக்தி பஜன் ஜாம்மிங்’
கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சரவணம்பட்டி, புரோசோன் மாலில், பக்தி பஜன் ஜாம்மிங் என்ற இசை கச்சேரி நிகழ்ச்சி, வரும் 12ம் தேதி துவங்குகிறது; 14 வரை நடக்கிறது.
புரோசோன் மால் மற்றும் ‘தினமலர்’ நாளிதழ் இணைந்து நடத்தும் பக்தி பஜன் ஜாம்மிங் நிகழ்ச்சியில், பாரம்பரிய பக்தி பாடல்களுக்கு, நவீன இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுவது சிறப்பம்சம்.
பொதுமக்கள் மத்தியில், அதிக கவனம் பெறும் பக்தி பஜன் ஜாம்மிங் நிகழ்ச்சியை, விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு நிகழ்ச்சியாக, முதன்முறையாக புரோசோன் மால் நடத்துகிறது.

