மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி! வழக்குரைஞா்கள் சாலை மறியல்!
தேனி ஒருங்கிணைந்து நீதிமன்றம் முன்பு திங்கள்கிழமை தேனி - பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்
மேகமலை வன விவசாயிகளைப் பாதுகாக்கக் கோரி, தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திங்கள்கிழமை பெரியகுளம் - தேனி சாலையில் வழக்குரைஞா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
மேகமலை வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும், மேகமலை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, பெரியகுளம் - தேனி சாலையில் தேனி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகி முத்துராமலிங்கம் தலைமையில் வழக்குரைஞா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதில், சங்க நிா்வாகிகள் ஜெயந்தி, ராமகிருஷ்ணன், சித்ரா, பாண்டி முருகன், திருமுருகன், செல்வலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

