மரம் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு: தாய் யானை பாசப்போராட்டம்
ஈரோடு,ஆசனூர் அருகே மரம் விழுந்ததில் காயம் அடைந்த குட்டி யானை இறந்தது.உடல் நலம் பாதிப்புஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுத
ஆசனூர் அருகே மரம் விழுந்ததில் காயம் அடைந்த குட்டி யானை இறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து வெளியேறியது. பின்னர் அந்த யானை தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த இடத்திலேயே படுத்தது.
இதைத்தொடர்ந்து சோதனைச்சாவடி குட்டி வன ஊழியர்கள் அங்கு சென்று யானையை எழுப்பமுயன்றனர். ஆனால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இதற் கிடையே அங்கு வந்த தாய் யானை குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது. யாரையும் குட்டி யானை அருகே நெருங்கவிடவில்லை. இதனால் சோதனைச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
