உலகளவில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு.. 3 ஆண்டுகளில் வரலாறு காணாத மாற்றம்!
உக்ரைன் - ரஷ்யா போரின் தொடக்கத்தில் மார்ச் 2022-இல் பதிவான அளவை விட 17 சதவீதம் குறைவு என்றும் அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வறட்சி, எல் நினோ (El Nino) அச்சுறுத்தல் மற்றும் போர்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக பிரச்சனை ஆகியவை உணவுப்பொருள் சந்தையை பாதித்துள்ளன. இதனால் தானியங்களின் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சர்க்கரையின் விலை கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சத்தையும் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.



