மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
திருவாரூர், திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார்
திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,
புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை எவ்வளவு பாசனத்திற்கு கொடுக்கலாம் என, துறை ரீதியாக ஆய்வு செய்த பிறகு தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நிச்சயம் மழை மற்றும் வெள்ளம் வரும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது. முதல்-அமைச்சர் அறிவித்த பயிர்கடன் தள்ளுபடி மானிய தொகை, விரைவில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு வந்து சேரும்.


