பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள்: ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
மும்பை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகதொடரப்பட்ட புகாரில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2019-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீத
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகதொடரப்பட்ட புகாரில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2019-ஆம் ஆண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி நீதிபதி என்.ஆர்.போர்கர் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கீழ் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் 6 வாரங்களுக்கு நீட்டித்தது.
சுப்ரீம்கோர்டில் மேல்முறையீடு செய்வதற்காக, கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கோரியிருந்தார். அவதூறு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கான உத்தரவின்படி, ராகுல் காந்தி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது.





