பிரிக்ஸ் மாநாடு: ராமேஸ்வரம் கோவில் புகழை உலகறியச் செய்த பிரதமருக்கு நன்றி - நயினார் நாகேந்திரன்
சென்னை, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தை முன்னிறுத்தி அதன் புகழை உலகறியச் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தை முன்னிறுத்தி அதன் புகழை உலகறியச் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தலைநகர் புதுடெல்லியில் உலகப் பொருளாதாரத்தின் முன்னணி நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியுள்ளது. சர்வதேச அரங்கில் பாரதத்தின் பெருமையும் செல்வாக்கும் விண்ணைத் தொட்டு நிற்கும் இவ்வேளையில், உலகத் தலைவர்களை வரவேற்கும் முதன்மை நுழைவு வாயிலில், தமிழகத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் பிரகாரத்தின் பிரம்மாண்டப் பின்னணியை அமைத்து, தமிழர்களின் கட்டிடக்கலையையும் ஆன்மிகப் பெருமையையும் உலக நாடுகளை வியந்து நோக்கச் செய்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.





