ஜார்கண்ட் தேர்வு முறைகேடு; மேலும் ஒருவர் கைது
ராஞ்சி,ஜார்கண்ட் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம், ஜார்கண்ட் மாநில பணியா ளர் தேர்வாணையம் ஆகியவை நடத்தி
ஜார்கண்ட் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம், ஜார்கண்ட் மாநில பணியா ளர் தேர்வாணையம் ஆகியவை நடத்திய தேர்வுகளில் காணப்பட்ட முறை கேடுகளை எதிர்த்து, தலைநகர் ராஞ்சியில் தேர்வர்கள் ஒரு மாதமாக போராட்டம் நடத்தினர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, குறிப்பிட்ட தேர்வுகளை மாநில அரசு ரத்து செய்தது. இருப்பினும், அந்த உத்தரவுக்கு ஜார்கண்ட் ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையே, ஜார்கண்ட் மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பட்ட தாரிகள் மட்டத்திலான தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மேலும் ஒருவரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.


