த.வெ.க., ஆட்சி நீடிக்காது செல்லூர் ராஜூ ஆவேசம்
மதுரை: மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாத, த.வெ.க., ஆட்சி ஓராண்டு கூட நீடிக்காது, என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க., பொதுக்கூட்டம் மகபூப்பாளையத்தில் நடந்தது. பகுதி செயலாளர் ராமசந்திரன் தலைமை வகித்தார்.
முன்னதாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி, செல்லுார் ராஜூ பேசியதாவது: த.வெ.க., அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக மக்களுக்கு புதிய திட்டங்கள் எதையும் அறிவித்ததாக தெரியவில்லை. மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அரசு உரிய தீர்வு காணவில்லை.



