மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில், வணிக நிறுவனத்தின் பெயர் பலகையை மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கத்தாலப்பட்டி அருகே மருதம்பட்டி காலனி, அம்மன் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் சுதந்திர பாண்டி, 24. இவர் பள்ளப்பட்டி மின்வாரிய அலுவலகம் எதிரே, புதிதாக அமைய உள்ள வணிக நிறுவனத்திற்கு, பெயர் பலகை மாட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு. பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.