அமெரிக்க ஓபன் - மைதானத்துக்குள் கஞ்சா வாசனை?... ஆட்டத்தை நிறுத்தி புகார் அளித்த உலகின் நம்பர் 1 வீராங்கனை
நியூயார்க்,அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் இருந்து திடீரென கஞ்சா புகைக்கும் வாசனை வீசியதால், உலகின் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா ஆட்டத்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மைதானத்தில் இருந்து திடீரென கஞ்சா புகைக்கும் வாசனை வீசியதால், உலகின் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா ஆட்டத்தை நிறுத்தி நடுவரிடம் புகார் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, உஸ்பெகிஸ்தானின் கமிலா ரகிமோவாவை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் சபலென்கா 2-0 என முன்னிலையில் இருந்தபோது, மைதானத்தில் திடீரென கஞ்சா வாசனை வீசியதாக தெரிகிறது. இதனால் சர்வீஸ் செய்ய முடியாமல் சிரமப்பட்ட சபலென்கா உடனடியாக ஆட்டத்தை நிறுத்தினார்.

