டேன் டீ தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு
கோத்தகிரி: டேன் டீ தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
டேன் டீ சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கரு. வெற்றிவேல், முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் படி,1964ல் தாயகம் திரும்பிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டேன் டீ) துவக்கப்பட்டது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ், ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிட்டு, தின ஊதியமாக, 700 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்.

