தடுப்பணை சீரமைக்க வலியுறுத்தல்
அரூர்: அரூர் அடுத்த குமாரம்பட்டியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே குமாரம்பட்டி தடுப்பணை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை மற்றும், 4.5 கி.மீ., துாரம் கொண்ட கால்வாய்கள் தற்போது, மிகவும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது.
தடுப்பணை மூலம், பாப்பனாவலசை, மாம்பட்டி, இட்லப்-பட்டி, குமாரம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்வதுடன், பல நுாறு ஏக்கர் பாசன வசதி பெறு-கிறது. மேலும் ஆழ்துளை மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டமும் உயர்கிறது. இந்நிலையில், குமரன் தடுப்பணை மற்றும் அதன் பாசன கால்வாய்களை சீரமைத்திட கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 4.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்-யப்பட்டது.தொடர்ந்து, 10 சதவீதம் பணி முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள-துடன், தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் அடித்து செல்லப்பட்-டன. சில மாதங்களுக்கு முன், குமாரம்பட்டி தடுப்பணையை ஆய்வு செய்த கலெக்டர் சரவணன், அரசின் வழிகாட்டுதல்படி, 21 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அர-சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த, அலுவலர்களுடன் ஆலோசனை மேற்-கொண்டார். தடுப்பணை சீரமைக்கும் பணியை விரைந்து துவங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

