ஹிந்துக்கள் குழந்தை பிறப்பு குறைகிறது வி.எச்.பி., பொதுச்செயலர் கவலை
கோவை: ''ஹிந்துக்களின் குழந்தை பிறப்பு சதவீதம், சரிவில் இருந்து மீண்டு வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,'' என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே கூறினார்.
கோவையில் உள்ள குஜராத் சமாஜ் பவன் அரங்கில், நேற்று இளம் தொழில் முனைவோர் உடனான கலந்துரையாடலில் அவர் பேசியதாவது:
நம் நாட்டில் ஹிந்துக்களின் பிறப்பு விகிதம் சரிந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் சகோதர, சகோதரிகளே இருப்பதுஇல்லை.



