தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயரும்; வரலாறு படைக்கும் வெற்றி அமையும்: அமைச்சர் செங்கோட்டையன்
திருப்பூர்: தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயரும்; இடைத்தேர்தலில் தவெகவுக்கு வரலாறு படைக்கும் வெற்றி அமையும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், விஜயலட்சுமி, விஜய் பாலாஜி ஆகியோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிறகு நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
இடைத்தேர்தலில் வெற்றி மட்டுமல்ல, வரலாறு படைக்கும் வெற்றியாக அமையும்; தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை உயருவதற்கு ஏதுவாக அமையும். அந்த வெற்றி என்பது தமிழகத்தில் வரலாறு படைக்கும் வகையில் முதல்வர் விஜய் கையில் ஒப்படைப்போம்.இரவு பகல் பார்க்காமல் அனைவரும் உழைப்போம்; வெற்றி கனியை அவரது இடத்தில் ஈட்டுவோம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.




