மருத்துவர்கள் To ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்.. பஞ்சாப் பிரதர்ஸின் அசத்தலான சிவில் சர்வீஸ் தேர்வு வெற்றி..
மூத்த சகோதரரான அஜய் பால் சர்மா 2011-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் (IPS) அதிகாரியாகத் தேர்வானார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மருத்துவத் துறையிலிருந்து இந்தியக் குடிமைப் பணிகளுக்குத் தேர்வாகி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள விகாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் அஜய் பால் சர்மா மற்றும் அமித் பால் சர்மா என்ற சகோதரர்கள். இர்களின் தந்தை அமர்ஜித் பால் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். தாய் பிரேம் சர்மா குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர். பெற்றோர் அளித்த ஊக்கத்தினால் லுதியானாவிலேயே தங்களின் ஆரம்பக் கல்வியை முடித்த இவ்விருவரும், முதலில் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்தனர்.



