ராசிபுரம் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதலாக ரூ.10 வசூல்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளில் 5958 என்ற எண் கொண்ட கடையில் மட்டும் மது பாட்டிலுக்கு அதிகபட்ச சில்லறை விலையைவிட 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் தொகை வசூலித்தால் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்த நிலையிலும், சில நாள்களுக்கு முன் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும், கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

