3 காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்
சாணார்பட்டி, செப்.12- திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பை சேர்ந்தவர்கள் மோதிராம் கிஷோர் 23, பாப்பாத்தி 22. இருவரும்
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பை சேர்ந்தவர்கள் மோதிராம் கிஷோர் 23, பாப்பாத்தி 22. இருவரும் காதலித்து வந்தனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.
இதேபோல் குட்டத்துபட்டியை சேர்ந்த ஆரோக்கிய நியூட்டன் 24, சிவகாசியை சேர்ந்த தரண்யா 25, மற்றொரு ஜோடி வடுகபட்டியை சேர்ந்த முரளிதரபாண்டி 22, தலையாரிபட்டியை சேர்ந்த சுபஸ்ரீ 22, வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, எஸ்.ஐ., பிரதீபா ஆகியோர் காதல் ஜோடிகளின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் மேஜர் என்பதால் எந்த இடையூறும் செய்யக் கூடாது என அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

