"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்
மிசா மற்றும் ஸ்டாலின் குறித்து நிர்மல் குமார் பேசியதற்கு முன்னாள் திமுக அமைச்சர் கடுமையாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்|Minister Nirmal Kumar’s remarks linking Stalin’s MISA arrest to his comments on women triggered sharp criticism from a former DMK minister.
ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார்.
அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதானார் என்று பேசினார் நிர்மல் குமார்.



