அரசியல் பக்கம்
* தகுதியில்லை! டில்லி கலவர வழக்கில் திஹார் சிறையில் உள்ள உமர் காலித் ஒரு தேசியவாதி. அவரது திரைப்படத்தை
டில்லி கலவர வழக்கில் திஹார் சிறையில் உள்ள உமர் காலித் ஒரு தேசியவாதி. அவரது திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏ.பி.வி.பி., அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது நகைப்பை ஏற்படுத்துகிறது. உமர் காலித் குறித்து பேசுவதற்கு ஏ.பி.வி.பி.,க்கு தகுதியில்லை. ஏனெனில், தேசவிரோதியும், நாட்டின் முதல் தீவிரவாதியுமான கோட்சேவை அவர்கள் பின்பற்றுகின்றனர். காங்கிரசில் இணைவதற்கு பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். மாநில பா.ஜ.,வில் எதிர்காலம் இல்லை.
'பிரிக்ஸ்' மாநாட்டை தலைமையேற்று நடத்தியதன் மூலம் உலகமே இந்தியாவின் பலத்தை பார்த்து மெய்சிலிர்த்து உள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மாநாட்டில் வழங்கப்பட்ட உணவுகளை வைத்து மலிவான அரசியல் செய்கின்றனர். இந்திரா, ராஜிவின் அஸ்தியை வைத்து காங்கிரஸார் தேர்தல் பிரசாரம் செய்தனர். அனைத்து விஷயங்களிலும் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. மழையின்மையால் சில பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான முயற்சிகள் எடுத்து வருகிறது. - பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர்
காங்கிரஸ் அரசு ஹிந்துக்களுக்கு எதிரான அரசாக செயல்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விநாயகர் ஊர்வலம் நடத்துவது தடுக்கப்படுகிறது. மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் மிகவும் குறைந்த அளவிலே விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. விநாயகர் ஊர்வலத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, பக்ரீத்துக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. மசூதியில் 365 நாட்களும் 'ஸ்பீக்கர்கள்' இயங்குகின்றன. இதற்கு எந்த கட்டுப்பாடும் விதிப்படுவதில்லை. - அசோக், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.


