`தளபதி... GOAT... வாரணம் ஆயிரம்!' - `ஃபேவரைட்ஸ்' சொன்ன கயாடு லோஹர்
"ரொம்ப மகிழ்ச்சியாகவும் பணிவாகவும் உணர்கிறேன். எனக்கு ஆடியன்ஸிடமிருந்து கிடைத்த அன்புதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்."
`டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்று, தனது ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவரும் கயாடு லோஹருக்கு, இந்த ஆண்டின் `Most Celebrated Star' விருதை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கினார்.
சமூக வலைதளங்களிலும், நேரிலும் என்னை அன்பாக ஆதரித்த அனைவருக்குமானது இந்த விருது.



