மதுரை : நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!
மதுரை வாடிப்பட்டி நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மணப்பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்
திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேல்மகள் வென்சியா (26) இருவருக்கும் நாளை 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.







