வேலூர் கோட்டைக்கு வருபவர்களை ஈர்க்கும் வேலூர் மீன் சேமியா கடை! - தெருவோரக் கடையின் 15 ஆண்டு சுவை
"பெங்களூர்ல இருந்தும் வருவாங்க. தமிழ்நாட்டுல பல ஊர்கள்ல இருந்தும் வருவாங்க. தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்து இந்த சுவையைத் தேடி வர்றவங்களே நிறைய பேர்," என்கிறார் கடையின் உரிமையாளர் பெருமையுடன்.
வேலூர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கோட்டை. ஆனால், அந்தக் கோட்டையைச் சுற்றி மாலை நேரத்தில் ஒரு சுற்று வந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். "மீன் சேமியா சாப்பிட்டீங்களா?" என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும்.
வேலூர் கோட்டை அருகே, பெரிய விளம்பர பலகைகளோ ஆடம்பர அலங்காரங்களோ இல்லாமல், ஒரு சிறிய தெருவோரக் கடை.


